சென்னையில் மிளகாய்ப்பொடி தூவி 4 லட்சம் வழிப்பறி- 5 பேர் கைது!!

 Four lakh robbery in midnight- 5 people arrested!!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை நந்தனம் சாலையில் மிளகாய் பொடி வீசி நான்கு லட்சம் ரூபாய் பறித்து சென்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி முதருணிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் தனது நண்பரான தன்மின் அன்சாரியை தாய்லாந்திற்கு வழியனுப்புவதற்காக அவருடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நந்தனம் தேவர் சிலை அருகேசென்று கொண்டிருந்தார்.அப்போது தலைக்கவசம் அணிந்தபடி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி மிளகாய் பொடியை முகத்தில் தூவி அவர்களிடம் இருந்த நான்கு லட்சம் ரூபாயை பறித்து சென்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜாபர் சாதிக்கை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்த தமிமுன் அன்சாரி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இது தொடர்பாகபுகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அந்த ஐந்து பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CCTV footage Chennai police Robbery
இதையும் படியுங்கள்
Subscribe