
தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.அதேபோல், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். நேற்று தமிழக தலைமைச் செயலாளராகஇறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டிருந்தார். அதேபோல், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது.இந்நிலையில் தற்பொழுதுதமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மருத்துவத் துறையின் முதன்மைச் செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக இருந்த ஜெகன்னாதன் பொதுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதாரதிட்டக் குழு இயக்குனராக தரேஸ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார திட்ட இயக்குனராக உமா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சண்முகசுந்தரம் 2002- 2008ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். 1996- 2001ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2015 முதல் 2017 சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)