Advertisment

மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசு... நான்குபேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு புதுக்குடி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் ஒரு பைபர் படகில் கரைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைக்க, புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலட்சுமி, திருப்புனவாசல் கடற்கரை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி மற்றும் காவலர்கள் கணேசன், ரெங்கநாதன் ஆகியோர் ரோந்து சென்று கண்காணித்தபோது புதுக்குடி சுடுகாடு கடற்கரை அருகே கடலில் நின்றுகொண்டிருந்த INDTN08MO909 என்ற பதிவெண் கொண்ட படகில் இருந்த படகின் உரிமையாளர் புதுக்குடி சுந்தராசு மகன் மாரிமுத்து (45), மற்றும் படகில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமு (48), நந்தகுமார் (49), ஜெகதீஷ் கண்ணன் (28) ஆகியோரை பிடித்து விசாரணைசெய்து படகை சோதனை செய்தபோது சுமார் 4 அடி நீளத்தில் 100 கிலோ எடை கொண்ட கடல் பசு உயிருடன் படகில் இருந்தது.

Advertisment

அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை வெட்டி விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வைத்திருந்த உயிருடன் இருந்த கடல்பசுவை மீட்ட போலிசார் மீண்டும் கடலில் சென்று விட்டதுடன் தடைசெய்யப்பட்ட கடல்பசுவை பிடித்து வந்ததாக 4 மீனவர்களை கைது செய்ததோடுபடகையும்கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisment

arrest fisherman police Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe