நான்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்- டி.ஆர்.பாலு கண்டனம்! 

Four Congress MPs suspended - DR Balu condemned!

காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (25/07/2022) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, "நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எம்.பி.க்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நடைமுறையிலே இல்லாத ஒன்று. இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், நாளை தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

Delhi Parliament pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe