திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சேலம், தஞ்சை, பரமக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 சிறுவர்கள், காவல்துறையினரால் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று இந்த சிறுவர்கள் நான்கு பேரும் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் மனோகரன், திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நான்கு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.