/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police-car_43.jpg)
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மணிகண்டன்(21). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறுமியை அவரது வீட்டுக்குத்தெரியாமல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மணிகண்டன் கடத்திச் சென்று வெளியூரில் வைத்துசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். சிறுமியைக் காணாத அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த கைகளத்தூர் போலீசார் கடந்த மாதம் 3ம் தேதி சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மணிகண்டனின் தந்தை ராமசாமி, அவரது உறவினர்கள் மாரிமுத்து உட்பட நால்வர் சிறுமியிடம் சென்று வீடியோ இருப்பதைத்தெரிவித்து, அவரைக் கடத்திச் சென்று தன் மகன் மணிகண்டனுக்குக் கட்டாயதிருமணம் செய்து வைப்போம் என்று மிரட்டி உள்ளனர். மேலும் சிறுமியிடம் அநாகரிகமாகப் பேசி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன சிறுமி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிறுமி விஷம் குடித்ததகவல் அறிந்த அவரது பெற்றோர், சிறுமியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமி மருத்துவமனையில் இருந்தபோது, அவரிடம் சேலம் மாவட்ட குற்றவியல் நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளார். அந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கைகளத்தூர் இன்ஸ்பெக்டர் நடராஜன், சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான மணிகண்டன், அவரது தந்தை ராமசாமி, தாய் ராணி அவர்களது உறவினர் மாரிமுத்து ஆகிய நால்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)