Advertisment

திருட்டு வழக்குகளில் நால்வர் கைது!-நகைகளை மீட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறை!

Four arrested in theft cases - Namakkal District Police recover jewelery

நாமக்கல் மாவட்டம்-குமாரபாளையம் காவல் நிலைய லிமிட்டில், இரவில் வீட்டை திறந்து வைத்துக்கொண்டு தூங்கும்போது, வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும், மல்லசமுத்திரம் லிமிட்டில், முகவரி கேட்பதுபோல் அருகில் சென்று, மூதாட்டி ஒருவரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுத்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியையும், தனிப்படை அமைத்து பிடிப்பதற்கு உத்தரவிட்டிருந்தார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ்.

Advertisment

வீடு புகுந்து 4 பவுன் நகை திருடிய வழக்கில், மயில்ராஜ், நவீன், சிவராஜ் ஆகிய மூவரையும், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 ½ பவுன் செயினை அறுத்துச் சென்ற வழக்கில், செட்டியார் என்ற ராஜேஷையும் கைது செய்து, மொத்த களவு சொத்துகள் 6 ½ பவுன் நகைகளையும், தனிப்படையினர் மீட்டுள்ளனர்.

Advertisment

கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வரில், மயில்ராஜ் என்பவனுக்கு, வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அன்னதானப்பட்டி, குமாரபாளையம், பள்ளிப்பாளையைம் ஆகிய காவல் நிலயங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

namakkal police Theft
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe