Advertisment

பத்து லட்சம் கேட்டு உறவினரிடம் கடத்தல் நாடகமாடிய இளைஞர் உட்பட நால்வர் கைது!

Four arrested for kidnapping a relative for Rs 10 lakh

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் அமித். இவர் தனது சொந்த மாமாவான அசேனின் வெங்காய மண்டியில் பணியாளராகவும், முக்கிய நபராகவும் பணிபுரிந்து வந்தார். அசேனுக்கு திடீரென நவம்பர் 5ஆம் தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அசேனிடம் பேசியவர்கள், அமிதை கடத்தி வைத்துள்ளதாகவும் ரூ.10 லட்சம் வேண்டும் எனக்கேட்டுள்ளனர். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் அமித்தை கொலை செய்வதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Advertisment

அதைக்கேட்டு அதிர்ச்சியான அசேன், உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையம் சென்று கடத்தல் புகார் கொடுத்தார். இந்தத் தகவல் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய புலன் விசாரணையில், இரண்டு மணி நேரத்தில் கடத்தல் நாடகமாடி, உள்ளூரிலேயே இருந்த கும்பலை செல்போன் டவர் மூலமாக மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், ஜாலியாக இருக்கப் பணம் தேவைப்பட்டதால் பணத்துக்காகக் கடத்தல் நாடகம் ஆடியதாகக் கூறியுள்ளனர். இதற்கு அமித் தனது நண்பர்களை பயன்படுத்தியதை விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அமித் உட்பட 5 நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர் ஆம்பூர் போலீஸார். கைதான 5 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

police TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe