thanjavur

தஞ்சையில் மாநகராட்சி கழிவறையை டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் ஆடிட்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், அச்சம்பவத்தோடு தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தஞ்சாவூர் கரந்தை சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆடிட்டரான மகேஸ்வரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் மாநகராட்சி கழிவறையை டெண்டர் எடுப்பதில் போட்டி இருந்துள்ளது. இந்த நிலையில், மர்ம கும்பல் ஒன்று மகேஸ்வரன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு காவல்நிலைய போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்தி, அரவிந்த், மணி உட்பட நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.