Skip to main content

நான்கரை வயது சிறுமி கொலை செய்யப்பட்டு நீர்த்தேக்க தொட்டியில் வீச்சு!! போலீசார் விசாரணை!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நான்கரை வயது சிறுமி தரை மட்ட நீர்தேக்க தொட்டியில் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளி யார் என போலீசார் தீவிர விசாரணை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

A four-and-a-half-year-old child was murdered in water reservoir !! Police investigation

 

கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்பவரது மனைவி சஜிதா வயது (32) இவருக்கு சுபாஷினி (வயது 14) ஸ்ரீஹர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். முத்த மகள் கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். சஜிதாவின் கணவர் அதேபகுதியில் உள்ள சென்‌னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு  சொந்தமான பங்களாவில் காவலாளியாக  பணிபுரிந்து வந்துள்ளார்.

 

 அவர் இறந்த பிறகு அந்த வீட்டின் உரிமையாளர் சென்னையில் இருப்பதால்  அவரது வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்யும் தொழிலாளியாக சஜிதா பணிபுரிந்து வந்துள்ளார்.  சஜிதாவிற்கு குடிப்பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை இரண்டாவது மகளான ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

புகாரின் பேரில் நேற்று மாலை சுமார் 4 மணிஅளவில்  போலீசார் எம் கைகாட்டி பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். பின்னர் சஜிதா வேலைக்கு செல்லும் பங்களா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கும்போது அங்குள்ள சுமார் 8 அடி உயரமுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியின் முடியை திறந்து பார்த்தபோது அதில் பொம்மை ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டனர். உடனே அருகிலிருந்த  காணாமல் போன குழந்தையின்  சகோதரியை அழைத்து அந்த பொம்மை காணாமல் போன ஸ்ரீஹர்ஷனியுடையதா என்று கேட்க அவர் ஆம் என்று சொல்லியுள்ளார். 

 

இதனை தொடர்ந்து தொட்டிக்குள் நன்றாக தேடியபோது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள்  முழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு சிறுமியின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

சம்பவமறிந்து பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிப்பழக்கம் உடைய சஜிதா தன்னுடைய நான்கரை வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்தாரா?  அல்லது  வேறு காரணங்களால் வேறு யாரேனும் கொலை செய்து வீசி சென்றனரா?  என்ற கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு  செய்து அதிலுள்ள பதிவுகளை வைத்து உண்மையான குற்றவாளி யார் என்று விசாரணை ‌செய்து வருகின்றனர் போலீசார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.