ADVERTISEMENT

துர்நாற்றம் வீசும் பாலாறு; பொதுமக்கள் வேதனை 

10:40 AM Nov 06, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழையால் மாராபட்டு பகுதியிலுள்ள பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாலாறு அருகாமையில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நேரடியாக ஆற்றில் திறந்து விடுகின்றனர். இதனால் ஆற்று நீர் முழுவதும் நுழைந்து ததும்பி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

இது குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் இதேபோல் ஆற்று நீரில் நுரை ததும்பி சென்ற போது மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றில் கழிவு நீரை திறந்து விடும் தோல் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டு இருக்கக் கூடிய செயல் பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீபாவளி மாமுல் கலெக்ஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT