Advertisment

ஃபார்முலா - 4 கார் பந்தயம்; சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Formula - 4 car racing; Traffic change in Chennai

Advertisment

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 பந்தய நிகழ்வான சென்னை ஃபார்முலா ரேசிங் சென்னை தீவுத்திடல் வரை மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி நாளை (31.08.2024) முதல் செப்டம்பர் 01 ஆம் தேதி(01.09.2024) வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனால் சென்னையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாகச் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “காமராஜர் சாலையில் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவிடம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம். மவுண்ட் ரோட்டில் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கித் திருப்பி விடப்படும். சிவானந்த சாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

Formula - 4 car racing; Traffic change in Chennai

Advertisment

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள், தீவுத்திடலைச் சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai drivers traffic
இதையும் படியுங்கள்
Subscribe