Advertisment

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடக்கம்!

Formula 4 car race starts in Chennai!

சென்னையில் ஃபார்முலா 4 பந்தயம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கார் பந்தயம் தொடங்க வேண்டிய நிலையில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. கார் பந்தயத்தை காண வந்த ரசிகர்களுக்கு, இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Advertisment

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதற்கு முன்பு சில நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்தது. அதில், கார் பந்தய வழியில் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதற்கான பெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஆட்டோமொபைல் (எஃப்.ஐ.ஏ) என்று சொல்லக்கூடிய சர்வதேச அமைப்பினர் செய்யக்கூடிய சோதனை சான்றிதழை இன்று மதியம் 12 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று சென்னையில் கடும் மழை பெய்ததால், எஃப்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று மதியம் 12 மணிக்கு சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்த காலத்தை, மேலும் நீட்டிக்க வேண்டும் எனத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு சார்பிலும் ரேசிங் நிறுவனம் சார்பிலும் இன்று அவசர வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மற்றும் ரேசிங் நிறுவனம் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான எஃப்.ஐ.ஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கார் பந்தயம் நடத்த எஃப்.ஐ.ஏ முதற்கட்ட அனுமதி கிடைத்தது. அதன்படி 7 மணிக்கு கார் பந்தயம் நடைபெறும் என அட்டவணை வெளியிட்டு வீரர்கள் கார்களை இயக்கி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், சென்னை தீவித்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார். எஃப்.ஐ.ஏ முதற்கட்ட அனுமதி கொடுத்த நிலையில் கார் பந்தயத்தின் பயற்சி போட்டிகள் தொடங்கின. இரவு 7 மணிக்கு தொடங்கிய கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 10:45 மணிக்கு நிறைவடைகின்றன. கார் பந்தயத்தைகாண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe