style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் வீட்டின் முன்பு தற்கொலை செய்து கொள்ள கடலூர் மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
காவிரிப்படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் டெல்லியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டின் முன்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் அறிவித்துள்ளார்.