Formerly Larry; A car that lost control and crashed; A bank manager who passed away tragically

Advertisment

சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நீலேஷ் பாபு என்பவர் பெருங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நீலேஷ், அவரது மனைவி அபூர்வா மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் நடைபெறும் ஊழியர்களுக்கான முகாமில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாகச் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வங்கி மேலாளர் நிலேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டு லாரிக்கடியில் சிக்கிய காரில் பயணம் செய்த 3 பேரை ஆம்பூர் கிராமிய போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மீட்டனர். இதில் நல்வாய்ப்பாக வங்கி மேலாளரின் மனைவி அபூர்வா உயிர் தப்பிய நிலையில் படுகாயமடைந்த கார் ஓட்டுநரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த வங்கி மேலாளர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகேலாரி மீது பின்னால் வேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.