factory

செய்தித்துறை அமைச்சர் இல்லத் திருமணம் குறித்த செய்திக் குறிப்பிலேயே இனிஷியலைத் தவறாகப் போட்டுவிட்டார்கள் அத்துறையினர். அதன்பிறகு, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு இன்னொரு மெயில் அனுப்பி சமாளித்தனர்.

Advertisment

கடந்த 2-ஆம் தேதி, சென்னை – அண்ணாநகர் அம்மா அரங்கில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மகன் அருண்குமாருக்கும், திவ்யாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்தி வரவேண்டும் என்பதற்காக, செய்திக்குறிப்போடு போட்டோ ஒன்றை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தனர். அதில் கடம்பூர் ராஜு மகன் அருண்குமாரின் பெயருக்கு முன்னால் ‘மு’ என்று இனிஷியல் போட்டிருந்தனர். மெயிலைப் பார்த்த ஒருவர் “அமைச்சர் மகனோட இனிஷியலை தப்பா போட்டிருக்கீங்க?” என்று கூற, இனிஷியலை ‘K’ என்று மாற்றி, திருத்தப்பட்டது என்று குறிப்பிட்டு இன்னொரு மெயிலை அனுப்பி வைத்தனர்.

Advertisment

next

அந்தத் திருமண வரவேற்பு மேடையின் இரு ஓரங்களிலும் சின்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போட்டோக்களை வைத்திருந்தனர். ஜெயலலிதா இருந்தபோது, எம்.ஜி.ஆருக்கு பெரிய அளவில் கட்சியினர் முக்கியத்துவம் தருவதை விரும்பாத காரணத்தால், நிகழ்ச்சிகளிலும், பேனர்களிலும் முடிந்தமட்டிலும் சின்னதாகவே எம்.ஜி.ஆர். படம் இடம் பெற்றிருக்கும். ஜெயலலிதாவும் அமரராகிவிட, எம்.ஜி.ஆர். விஷயத்தில் ஜெ. எடுத்த அதே நிலைப்பாட்டை, இப்போது அக்கட்சியினர் கையில் எடுத்திருக்கின்றனர். ஜெயலலிதாவே உசத்தி என்ற நிலை மாறி, , சம அளவில் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இப்போது மரியாதை கிடைத்து வருகிறது.