தமிழக சமூக நலத்துறை அமைச்சராக 1991 – 1996 காலக்கட்டத்தில் இருந்தவர் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவருடைய கணவர் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறை செயலாளர் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

welfare minister Indira Kumari ; Girija Vaidyanathan testifies in Special Court

இந்த வழக்கு சென்னையிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இருந்ததால், அவர் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

welfare minister Indira Kumari ; Girija Vaidyanathan testifies in Special Court

Advertisment

இதனைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.