ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினம்; முதல்வர் மரியாதை

11:00 AM Aug 17, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்குத் தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுக்கிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மதுரை மாவட்டம் சிலைமான் அருகே அமைந்துள்ள அண்ணா மண்டபத்தில் முரசொலி மாறன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொதுமக்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாகச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைந்திருக்கும் முரசொலி மாறன் சிலைக்கு மாலை அணிவித்து அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT