/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/farmer 8999.jpg)
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை (வயது 74) மாரடைப்பால் சென்னையில் காலமானார். தலித் எழில்மலைக்கு முனிரத்தினம் என்ற மனைவியும், மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 1999- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர் தலித் எழில்மலை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தலித் எழில்மலை 2001- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் திருச்சியில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
Follow Us