தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவின் இலச்சினை வெளியிட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (02.06.2023) காலை நடைபெற்றது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.