Advertisment

மூதாட்டி கொலை- முன்னாள் ராணுவ வீரர் கைது

Former soldier arrested for case of elderly woman over debt collection

திருவள்ளூரில் கடன் வசூல் விவகாரத்தில் மூதாட்டி ஒருவரை முன்னாள் ராணுவ வீரர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முன்னாள் ராணுவ வீரர் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் மீசகண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (67). அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரான கடிகாசலம் என்பவரிடம் வள்ளியம்மாளின் மூத்த மகன் முருகன் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை முருகன் தராததால் இது தொடர்பாக வள்ளியம்மாளிடம் கடிகாசலம் கேட்கச் சென்றுள்ளார்.

Advertisment

அப்பொழுது கடிகாசலத்திற்கும் வள்ளியம்மாளுக்கும் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது கடிகாசலம் தன் கையில் இருந்த கத்தியால் மூதாட்டியின் தலையில் வெட்டி நிலையில் சம்பவ இடத்திலேயே வள்ளியம்மாள் சுருண்டு விழுந்தார். வள்ளியமாரின் உறவினர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் கடிகாசலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loan old lady police thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe