மடிக்கணினி வழங்காததால் சாலைமறியல் - திணறும் அதிகாரிகள்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தனியார் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மஜருலும் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2017-18, 2018 -19 ஆம் ஆண்டில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்றுள்ளனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி தமிழக அரசு காலம் தாழ்த்தி அவர்கள் பள்ளி படிப்பு முடித்து செல்லும் வரை வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது 2019-20 ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஜீலை 1ந்தேதி இதே பள்ளியில் மடிக்கணினி வழங்கப்பட்டது.

former school student's protest for provide laptop!

இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த பழைய மாணவர்கள் ஜீலை 2ந்தேதி காலை 11 மணியளவில் பள்ளி முன்பு திரண்டு எங்களுக்கு ஏன் மடிக்கணினி வழங்கவில்லை எனக்கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமையாசிரியர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விரைந்து வந்த ஆம்பூர் நகர ஆய்வாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்போதே எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனக்கேட்டு மாணவர்கள் பள்ளிக்கு வெளியே வந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

former school student's protest for provide laptop!

அங்கு வந்த காவல்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், இன்னும் 15 நாட்களுக்குள் உங்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், திருப்பத்தூர் நகரிலும் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி அதிமுக அரசாங்கம் வழங்கவில்லை. இதனால் இதில் ஒரு பகுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களையும் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

former school student's protest for provide laptop!

தமிழகம் முழுவதும்மே கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக லட்சத்துக்கும் அதிகமான மாணவ - மாணவிகளுக்கு அரசாங்கம், இலவச மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது பயிலும் மாணவ - மாணவிகளுக்கு வழங்குகிறது. இதனால் மடிக்கணினி பெறாத மாணவ - மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களை சமாதானம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். சிலயிடங்களில் போலிஸார் அடித்து துரத்துகின்றனர்.

free laptop issue protest school student
இதையும் படியுங்கள்
Subscribe