Former Reserve Bank Governor meets Chief Minister MK Stalin!

Advertisment

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சிப் பெற நடவடிக்கை எடுக்கும் வகையில், பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ், டாக்டர் எஸ்.நாராயண் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த குழுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருவருமான ரகுராம் ராஜன் இன்று (13/12/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.