Skip to main content

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் மறைவு; தமிழக முதல்வர் இரங்கல்

 

இந்திய ரிசர்வ் வங்கியின் 18-வது ஆளுநராக இருந்தவர் எஸ்.வெங்கிடரமணன் (92). நாகர்கோவில் மாவட்டத்தில் பிறந்த இவர் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1989ஆம் வரை நிதியமைச்சகத்தின் நிதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதனை தொடர்ந்து, இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 1992 என இரண்டு காலம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள் இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். 

 

நாட்டின் நெருக்கடி காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய வெங்கடரமணன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது சேவை என்றும் மறக்கமுடியாது என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெங்கிடரமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர், ‘ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், நிதித்துறை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர் வெங்கிடரமணன். இன்று அவர் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவுக்கு, அவரது மகளும், முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்