/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9001_0.jpg)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்குமனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவரது அரசியல் சித்தாந்தத்தில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயினும் மாற்று கருத்து உடையவர்களும் மதிக்கத்தக்கவராக அவர் வாழ்ந்தார் என்பது அவரது சிறப்பை உயர்த்தி காட்டுகிறது.
மூன்று முறை பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர், நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்றவாதி என அரசியல் பணியாற்றிய அவரை இழந்து வாடும், குடும்பத்தினருக்கும், அவரது பராதிய ஜனதா கட்சியினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)