Former Prime Minister Rajiv Gandhi statue broken in Kanyakumari

Advertisment

கன்னியாகுமரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு மார்பளவில் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டங்களிடையே நேற்று இரவு ராஜீவ்காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற மக்கள் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்துசிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் நேற்று இரவு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களையும்,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டதை அறிந்து காங்கிரஸ் கட்சியினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.