முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு பின் பரோலில் கடந்த 12- ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி வெளியே வந்து திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார் பேரறிவாளன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perari5.jpg)
பேரறிவாளன் தனது பரோல் மனுவில், தந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும், தனது சகோதரி அன்புமணி ராசாவின் மகள் திருமணத்தில் கலந்துக்கொள்ளவும் அனுமதி கேட்டுயிருந்தார். அதற்கான அனுமதி தரப்பட்டுயிருந்தது. அதன்படி தனது கிருஷ்ணகிரியில் உள்ள சகோதரி மகள் செவ்வை மற்றும் திருப்பத்தூர் ஏ.கே.மோட்டூர் பகுதியை சேர்ந்த கௌதமன் ஆகிய இருவருக்கும் கிருஷ்ணகிரி அருகே தனியார் மண்டபத்தில் நவம்பர் 24ந்தேதி வாழ்க்கை துணைவர் ஏற்பு விழாவாக இந்த திருமணம் நடைபெற்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perari44.jpg)
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு பேரறிவாளன் நேற்று (23.11.2019) அழைத்து செல்லப்பட்டார். இன்று (24.11.2019) காலை 08.00 மணிக்கு மீண்டும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் மீண்டும் தன் வீட்டுக்கு திரும்புகிறார் என்பது குறிப்பிடதக்கது.
Follow Us