Skip to main content

ஏழுபேர் விடுதலை... இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கும் ஆளுநர்! –உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Published on 29/07/2020 | Edited on 30/07/2020

 

former prime minister rajiv gandhi incident chennai high court tn govt

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை விவகாரத்தில், பல்நோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. அவருக்கு, முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக, 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்.  தற்போது,  கரோனா காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகனுக்கு பரோல் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 

former prime minister rajiv gandhi incident chennai high court tn govt

 

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது, இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன்? மேலும் அரசியல் சாசனத்தில் ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், 2 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருக்கலமா? அமைச்சரவை முடிவை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் உரிமை. ஆனால் முடிவைத் தெரிவிக்க வேண்டும். அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பரோல் வழங்குவதில்கூட தகுந்த உத்தரவைப் பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக் கூடாது? பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் அதிகாரிகள் உரிமைதான். ஆனால், பரோல் கோரிய மனு மீது முடிவெடுக்க வேண்டும்.

 

கடந்த மார்ச் மாதம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நினைவூட்டல் மனு அளிக்கப்பட்டும்,  ஏன் ஜூலை வரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அதிகாரிகள் உரிய முறையில் செயல்படாததால்தான், நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற கவனிக்கக்கூடிய வழக்குகளில்கூட, உரிய பதிலை அதிகாரிகள் அளிக்காமல் உள்ளனர். இதுபோன்ற நிலையில், சாதாரண கைதிகளின் வழக்குகளில் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது.  

 

அரசு, சிறைத்துறை, அரசு அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமையாற்றினால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் கும்பகர்ணன் மாதிரி அதிகாரிகள் தூங்கி கொண்டுள்ளீர்களா? அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா? இந்தக் கால தாமதத்திற்கு, அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், சிறையில் உள்ள கைதிகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

 

http://onelink.to/nknapp

 

கடந்த விசாரணையின்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலாளர், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறைச் செயலாளர்) பதில் அளித்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க, பல்நோக்கு விசாரணை முகமையின் (MDMA) இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார். பேரறிவாளன் பரோல் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார். 

 

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பரோல் மனு மீது தமிழக சிறைத்துறை, வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கின் அடுத்த விசாரணையை வரும்  திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த காலியிடத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். அரசியல் பயணம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.