former prime minister rajiv gandhi incident case chennai high court

பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் கேட்டு, அவரது தாயார் அற்புதம்மாள் கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக சிறைத்துறை தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறை தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளில் 'பரோல்' என்ற வார்த்தையே இல்லை என்றும், 'லீவ்' எனச் சொல்லப்படும் 'விடுப்பு' மட்டுமே வழங்க சிறை விதிகள் வகை செய்யப்பட்டிருப்பதாகவும்தெரிவித்தார்.ஏற்கனவே விடுப்பு பெற்றிருந்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிறகே விடுப்பு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பேரறிவாளனுக்கு கடந்த முறை விடுப்பு வழங்கியது தொடர்பான உத்தரவுகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 24- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.