முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கோரி சிறைத்துறையிடம் அளித்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நளினி பின்பற்றிய விதிகளை ராபர்ட் பயஸ் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனையடுத்து சிறைத்துறையின் சட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் ராபர்ட் பயஸ் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.