Advertisment

அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்!

Former President Dr APJ Abdul Kalam's elder brother IN RAMESHWARAM

ராமேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் (வயது 104) வயது மூப்பு காரணமாக காலமானார்.

Advertisment

கலாமின் சகோதரர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அன்புச் சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மறைந்த செய்தியறிந்து துயரத்திற்கு உள்ளானேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Rameshwaram brother Abdul Kalam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe