/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PON MANICKAVEL5_0.jpg)
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்து ஓய்வுபெற்ற பொன்.மாணிக்கவேல் தோட்டாக்கள் நிரம்பிய தனது கைத்துப்பாக்கியை ரயிலில் தவறவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், காளைமாடு சிலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக, ஏற்காடு விரைவு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு சென்று சேர்ந்தார். சிறிது நேரத்திலேயே தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த எட்டு தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கியைக் காணவில்லை என ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் அவர் பயணம் செய்த ரயிலின் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது, அவர் அமர்ந்திருந்த இருக்கையிலேயே, அவரது கைத்துப்பாக்கிக் கண்டுபிடிக்கப்பட்டது.
தோட்டாக்கள் நிரப்பப்பட்டத் துப்பாக்கியை கவனக்குறைவாக, அவர் தனது இருக்கையிலேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பொன்.மாணிக்கவேலின் துப்பாக்கி, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Follow Us