முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்,நெதர்லாந்தில் உள்ள 29 வயதான தனது மகன் தமிழ்கோ திருமண விழா ஏற்பாடுகளை செய்வதற்கு 30 நாட்கள் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. பரோல் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை, புழல் சிறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக பரோலில் வெளியே வந்து சிறை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222.jpg)
உயர்நீதிமன்றம் பரோல் கொடுக்கும் பட்சத்தில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் இல்லத்தில் தங்குவேன் என்று பரோல் மனுவில் ராபர்ட் பயஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us