former MP K.P.Ramalingam join with bjp

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைந்தார்.

Advertisment

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி முன்னிலையில் முன்னாள் எம்.பி., கே.பி. ராமலிங்கம் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, "கே.பி.ராமலிங்கம் வருகையால் தி.மு.க. பலமிழக்கிறது; பா.ஜ.க. பலம் பெறுகிறது" என்றார்.

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி.கே.பி.ராமலிங்கம் இன்று மாலை சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.