ADVERTISEMENT

வீரமணி வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர்... செய்தியாளர்களை தாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ!

08:05 AM Sep 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT


முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு மற்றும் அவருடன் சம்மந்தப்பட்ட உறவினர்கள், பினாமிகள் என 28 இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுக்குறித்த செய்திகள் வெளிவந்ததும் அதிமுகவில் உள்ள வீரமணியின் ஆதரவாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர். போலிஸார் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சரான வீரமணி வீட்டுக்குள் உள்ளே உள்ளார் அவரை பார்க்கவேண்டும் எனச் சட்டம் பேசினர். காவல்துறை அதனை கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில் வாணியம்பாடி தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ சம்பத்குமார் தலைமையில் அதிமுகவினர் காவல்துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


இதனையெல்லாம் செய்தியாகப் பதிவு செய்து கொண்டுயிருந்த தினகரன் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கணேஷ்குமார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். காவல்துறை தலையிட்டு செய்தியாளரின் உயிரைக் காப்பாற்றியது. முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் நாக்கை கடித்து செய்தியாளரை மிரட்டினார். சன் டிவியின் சேலம் மண்டல செய்தியாளர் குமரேசன் மீதும் தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்த மற்ற செய்தியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மற்ற செய்தியாளர்களையும் மிரட்டினர் அதிமுக நிர்வாகிகள்.


இது குறித்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் செய்தியாளர்கள் ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்குச் சென்று அதிமுகவினர் மீதும், முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீது புகார் தந்தனர். அந்த புகாரை வாங்கி வைத்துக்கொண்ட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்தனர். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT