Advertisment

நாட்டுக்கோழி கேட்கும் முன்னாள் எம்.எல்.ஏ.! - ராஜேந்திரபாலாஜி விசாரணையில் காமெடி! 

tt

ராஜேந்திரபாலாஜி தேடுதல் வேட்டையின் அடுத்த நடவடிக்கையாக, முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனையும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Advertisment

ஏதோ சொந்த விஷயமாக மதுரை வந்திருந்த இருவரையும், விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்திருக்கின்றனர். தற்போது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் உட்காரவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

அங்கிருந்தபடியே நம்மைத் தொடர்புகொண்ட முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் “நான் என்ன அவரு கையப்பிடிச்சா கூட்டிட்டு போனேன். அவரு எங்கேயிருக்காருன்னு யாருக்கு தெரியும்? எதுக்கு இங்கே கூட்டிட்டு வந்தாங்கன்னு தெரியல. அரைமணி நேரமா உட்கார்ந்திருக்கோம். யாரும் ஒருவார்த்தை பேசல. பசிவேற வயித்தக் கிள்ளுது. பர்மா கடைல நாட்டுக்கோழி சாப்பாடு வாங்கித் தருவாங்களான்னு தெரியல.” என்று சத்தம்போட்டு சிரித்தார்.

ராஜவர்மனின் சிரிப்பொலி காவல்துறை அதிகாரிக்கு கேட்காமலா இருக்கும்?

rajavarman rajendra balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe