தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சென்னை தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப்படும். தாம்பரம், ஆவடியைதலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும். மேம்பாட்டு நிதியை தங்கள் தொகுதியில் எந்தப் பணிக்கு வேண்டுமானாலும் சட்டமன்ற உறுப்பினர் பயன்படுத்தலாம். நிதியை சில பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதி மாற்றப்படுகிறது" என்றார்.
இதனிடையே, ஓய்வுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூபாய் 20,000- லிருந்து ரூபாய் 25,000 ஆக உயர்த்துவதற்கான மசோதாகுரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.