Advertisment

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கார் விபத்தில் மரணம்!

Meensurutty

ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் 2006- இல் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறியுள்ளார். இவரது சொந்த ஊர் மீன்சுருட்டி அருகே உள்ள ராம தேவநல்லூர். இவரது மகன் ராஜ்கமல் (வயது 30). இளைஞரான இவர் சுறுசுறுப்பாகக் குடும்பப் பணிகளைப் பொறுப்புடன் கவனித்து வந்துள்ளார்.

Advertisment

இவர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடு, ஊருக்கு அருகில் உள்ளது. அந்தப்பண்ணை வீட்டிற்குக் காரில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் ராஜ்கமல் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

car Former MLA jayankondam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe