Skip to main content

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் கார் விபத்தில் மரணம்!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

Meensurutty


ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் 2006- இல் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறியுள்ளார். இவரது சொந்த ஊர் மீன்சுருட்டி அருகே உள்ள ராம தேவநல்லூர். இவரது மகன் ராஜ்கமல் (வயது 30). இளைஞரான இவர் சுறுசுறுப்பாகக் குடும்பப் பணிகளைப் பொறுப்புடன் கவனித்து வந்துள்ளார்.
 

இவர்களுக்குச் சொந்தமான பண்ணை வீடு, ஊருக்கு அருகில் உள்ளது. அந்தப் பண்ணை வீட்டிற்குக் காரில் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது, அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இதில் ராஜ்கமல் பலத்த காயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அதிமுக மாஜி எம்.எல்.ஏவின் சகோதரி வீட்டிலும் ரெய்டு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 AIADMK ex-MLA's sister's house also raided

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

 AIADMK ex-MLA's sister's house also raided

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தியாகதுருகத்தில் உள்ள பிரபு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வின் வீட்டில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சோதனையின் முடிவு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.