அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (வயது 66) மகனின் திருமண நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றுவிட்டு திருப்பதி மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கோவைக்கு நாளை (09.11.2024) காலை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்த போது கோவை செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். அதன்பின்னர் திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.