Advertisment

கவர்னருக்கு நிலக்கரி மாலை போட தயாராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கைது

நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழக கவர்னருக்குக்கு நிலக்கரியால் மாலை அணிவிக்க தயாராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் நாகூரில் கைது செய்யப்பட்டார்.

Advertisment

Former MLA arrested

நாகை மாவட்டம் நாகூர் அருகே மார்க் தனியார் கப்பல் துறைமுகம் இயங்கி வருகிறது. அங்கு விதிகளை மீறி மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கக் கூடிய வகையும் , நிலக்கரி, ரசாயன உரங்கள் இறக்குமதி செய்கின்றனர். அதற்கு பாதுகாப்பு கொடோன்கள் இல்லாததால், திறந்த வெளியிலேயே கொட்டி பல்வேறு இடங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பப்படுகிறது. அதிலிருந்து வெளியேறும் நிலக்கரி துகள்கள் நாகூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை வெகுவாக பாதித்து வருகிறது. நுரையீரல் பாதிப்பு . ஆஸ்துமா, மாரடைப்பு என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருகின்றனர். அதோடு புகழ் பெற்ற நாகூர் தர்க்கவும் நீலக்கரி துகள்கள் அடைந்து மாசுபட்டே கானப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்தநிலையில் நாகைக்கு வரும் கவர்னர். துறைமுகத்தை ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் கவர்னருக்கு மக்களை திரட்டி நிலக்கரி மாலை அணிவிப்போம் என அறிவித்திருந்தார் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ நிஜாமுதீன்.

Advertisment

இந்த நிலையில் இன்று விடியற்காலையில் அவரை கைது செய்துள்ளது காவல்துறை. அப்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நிஜாமுதினிடம் கேட்டோம், " வரலாறு சிறப்புமிக்க இந்த பகுதி அந்த துறைமுகத்தினால் மங்கி போகிறது. மக்கள் வாழ முடியாத நிலை உறுவாகிவிட்டது. ஒவ்வொரு நொடியும் நரக வேதனைக்கு தள்ளப்பபட்டு விட்டோம். விதிகளை மீறி நிலக்கறி இறக்குமதி செய்கின்றனர். இதனை கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும், இல்லையெனில் போராட்டம் தொடரும்" என்கிறார்.

க.செல்வகுமார்

MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe