2001 முதல் 2006 வரை ’ஜெ’ ஆட்சியிலிருந்த காலத்தில் நெல்லை மாவட்டத்தின் அம்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சக்திவேல் முருகன். அம்பை தொகுதியிலுள்ள வி.கே.புரத்தின் அகஸ்தியர்பட்டியில் குடியிருந்து வருகிறார். பதவிக்குப் பின்பு அகஸ்தியர்பட்டியின் வீட்டு வசதி சங்கத் தலைவராகவும், வி.கே.புரத்தின் மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தவர். தற்போது அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பிலுமிருந்தார்.

 Former MLA of AIADMK passes away

Advertisment

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் சக்திவேல் முருகனுக்கு இருதய பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் பின் ஒய்விலிருந்திருக்கிறார். நேற்றிரவு அவருக்குத் திடீரென காய்ச்சல் வர,நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தவர், வீடு திரும்பினார். தூங்கினால் சரியாகிவிடும் என்று சொல்லி விட்டு இரவு தூங்கியிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட, இரவில் உயிர் பிரிந்திருக்கிறது.

இவரது மகன் மகாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியில் உள்ளார். அடுத்த மகளான டாக்டர் சௌந்தரி பால திருமணமாகி களக்காட்டில் உள்ளார். இன்னொரு மகளான டாக்டர் சூர்ய பாலா அமெரிக்காவில் வசித்து வருகிறார். மறைந்த முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகனின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment