Former Minister's letter to Collector

தங்களது மாநில மக்கள் வெளிமாநிலங்களில் தொழிலாளர்களாக, சுற்றுலா பயணியாக, பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியராக இருந்தால், அவர்களை முறையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து, அந்தந்த மாநில அரசுகள் தங்களது மாநிலத்துக்கு அழைத்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு.

Advertisment

Advertisment

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை சேர்ந்த 30 மலைவாழ் மக்கள் கர்நாடாக மாநிலத்தில் உள்ள ஒரு காப்பி தோட்டத்தில் உணவின்றி தவித்து வருகின்றனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதி தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த 19 நபர்கள், கேரளா மாநிலத்தில் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வர துடிக்கின்றனர், இதுப்பற்றிய கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் வைத்தனர். இந்நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இதனை பயன்படுத்திக்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைத்து வர மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தனது மகனும், கலசப்பாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பனிடம் தந்து அனுப்பினார்.

திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், கம்பன் இருவரும், கலெக்டர் கந்தசாமியை சந்தித்து அந்த கடிதத்தை தந்தார். ஏப்ரல் 30ந்தேதி கடிதத்தை பெற்றவர், இது தொடர்பாக உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தி, அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கிறேன் என வாக்குறுதி தந்துள்ளார் என கம்பன் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.