Advertisment

இளைஞர்களுடன் வாலிபால் விளையாடிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Former minister Vijayabaskar played volleyball with the youth

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகி வடிவேல் இல்ல காதணி விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அவ்விழாவிற்கு கலந்துகொண்ட பிறகு திரும்பியபோது, வலையப்பட்டி பகுதியில் இளைஞர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளார். உடனடியாக, அவர் காரை விட்டு இறங்கிச் சென்று அந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

Advertisment

பொதுவாகவே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பெயரில் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகடமி நடத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு வீரர்களை பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை பெற உதவியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இளைஞர்களுடன் சேர்ந்து வாலிபால் விளையாடிய வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Advertisment
volleyball pudukkottai vijayabaskar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe