Advertisment

மனுஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும்; அதேநேரம் திருமாவளவன்... - முன்னாள் அமைச்சர் வளர்மதி!

Former minister valamathi about thirumavalavan latest statement

பெண்கள் குறித்து திருமாவளவன் பேசியது கண்டிக்கத்தக்கது, அதே நேரத்தில் மனுஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டியளித்துள்ளார்.

Advertisment

சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போது பாடநூல் கழகத் தலைவருமான வளர்மதியின் குலதெய்வ கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இதனை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் வளர்மதி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமாவளவன் பெண்கள் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது என்றும், அதே நேரத்தில் பெண்கள் குறித்து இழிவாக கூறும் மனுஸ்மிருதி நூலை தடை செய்ய வேண்டும்எனவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட கட்சியினர் இதில் கலந்து கொண்டனர்.

Thirumavalavan vck admk valarmathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe