Skip to main content

பண மோசடியில் முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது..! 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

Former minister Saroja's relative arrested for money laundering

 


ராசிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு வயது 45. கடையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் விழுப்புரம் மாவட்டம், பொன்னன்குப்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ். இவர்கள், இருவரும் நண்பர்கள்.  குணசேகரனுக்கு சில காலத்திற்குமுன்பாக தனது நண்பர் பாக்யராஜ் மூலம், அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அக்கா மகன் ரமேஷ் பாபு அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக பாக்யராஜிடம் கூறியுள்ளார். இதைடுத்து குணசேகரன், பாக்யராஜ் இருவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் ஆகிய வேலைகளுக்காக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 35 லட்ச ரூபாய் பணத்தை ரமேஷ்பாபுவிடம் கொடுத்துள்ளனர். 

 

இந்தத் தொகையை விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள ஒரு வங்கியில், இருந்து ரமேஷ்பாபு முதல் மனைவி சூரிய வர்ஷினி வங்கி கணக்கிற்கு, இரண்டாவது மனைவி ரேவதி வங்கி கணக்கிற்கு மற்றும் அவரது மாமா சௌந்தரராஜன் வங்கி கணக்கிற்கு என மூன்று பேர் வங்கி கணக்கிற்கும் அந்த 35 லட்சம் பணப் பரிமாற்றம் செய்து கொடுத்துள்ளனர். 

 

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக வேலை வாங்கி தருமாறு பலமுறை கேட்டும் ரகேஷ் பாபு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் தேர்தலுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ரமேஷ் பாபுவிடம் குணசேகரன் மற்றும் பாக்யராஜ் ஆகியோர், தாங்கள் கொடுத்த பணத்திற்கு வேலை வாங்கித் தரவில்லை. அதனால் நாங்கள் கொடுத்த  பணத்தை திருப்பிக் கொடுங்கள் என கேட்டுள்ளனர். 

 

இதனால் கோபமடைந்த ரமேஷ்பாபு, குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குணசேகரன் கொடுத்தப் புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவன்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரமேஷ்பாபுவை தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் சென்னை அசோக் நகர் சர்வமங்களா காலயில் கண்டு பிடித்தனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் கொண்ட குழுவினர் சென்னைக்கு சென்று ரமேஷ் பாபுவை கைது செய்து உரிய விசாரணைக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்