Advertisment

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!

Former Minister Rb Udhayakumar arrested

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் செல்லக்கூடிய சாலையில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக ஆலப்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் இந்த பகுதியில் விபத்தும் அதிக அளவில் நடைபெறுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தான் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்கக் கோரி 300க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார். இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார் அப்போது போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

இதில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட சாலையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அருகில் உள்ள திருமணம் மண்டபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டனர். முன்னதாக திருமங்கலம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

arrested thirumandalam madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe