Skip to main content

‘சரண்டரானா ராஜேந்திரபாலாஜிக்கு நல்லது!’ - விசாரணையும் புலம்பல்களும்!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Former Minister Rajendrabalaji case police

 

‘ஆனாலும்.. இந்த ராஜேந்திரபாலாஜியால நாங்க படற பாடு இருக்கே..’ என்று ஆந்திராவிலும், டெல்லியிலும் முகாமிட்டு வலை வீசி காத்திருக்கும்  காவல்துறையினர் நொந்துபோய் புலம்புகிறார்களாம். 

 

விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரி, ‘ஏம்பா.. நீங்க தேடறீங்களா.. இல்லைன்னா ரூம் போட்டு படுத்து தூங்குறீங்களா?’ என்ற சந்தேகத்துடன், டீமில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசி, தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதை உறுதிசெய்தபடியே இருக்கிறாராம். அதனால், அந்த அதிகாரியிடம் தனிப்படை டீமில் உள்ள ஒவ்வொருவரும்  ‘ஒரே மாதிரி’ பேச வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றனராம். 

 

அந்த முன்னாள் எம்.பி. காவல்துறையினரிடம் ‘அவருக்கு தெரியாம இருக்காது. ராஜேந்திரபாலாஜி எங்கே இருந்தாலும் அவருகிட்ட பேசாம இருக்கமாட்டாரு.. நல்லா விசாரிங்க..’ என்று தனக்குப் பிடிக்காத கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி வருகிறாராம். காவல்துறையும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் நைச்சியமாகப் பேசி ‘அவரை பெரிசா என்ன செஞ்சுடப் போறோம். இருக்கிற இடத்த சொல்லுங்க. அவரு நல்லதுக்குத்தான் கேட்கிறோம்.’ என்று ஏதாவது பதில் பெறுவதில் முனைப்புடன் இருக்கின்றனராம்.  

 

விசாரணையின்போது ‘தெரியாது.. எதுவும் தெரியாது..’ என வாயை இறுக்கமாக மூடிக்கொள்ளும் நிர்வாகிகளிடம்  ‘அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க.. சத்துணவு போஸ்டிங் போட்டிருப்பாங்கள்ல.. அதுல ஒருத்தர பிடிச்சு, பணம் கொடுத்தோம்னு புகார் கொடுக்கச் சொல்லுங்க..’ என்று நச்சரிக்கவும் செய்கின்றனராம்.

 


‘அய்யா ராஜேந்திரபாலாஜி.. நீங்க எங்கேதான் இருக்கீங்க? சரண்டராகி, இந்த போலீஸ் இம்சைல இருந்து எங்களை காப்பாத்தக்கூடாதா!’ என்று வாய்விட்டு புலம்புகிறார்களாம், அவரோடு நட்பு வட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள். 

 

சினிமா பாடல்களைப் பாடுவதில் ஆர்வமுள்ளவரான ராஜேந்திரபாலாஜி ‘ஊரை புரிஞ்சிக்கிட்டேன்; உலகம் தெரிஞ்சிகிட்டேன்.’ என்று பதுங்கியிருக்கிற இடத்தில், தன் சகாக்களிடம்  ‘சிச்சுவேசன் சாங்’ பாடிக்கொண்டிருக்கிறாரோ என்னவோ? 

 

 

சார்ந்த செய்திகள்