முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கஃபீல் அதிமுக கழக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட கழக துணை செயலாளராகவும் இருந்தவர். இந்நிலையில் அவர் அதிமுகவின் அனைத்து விதமான பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும் இதனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.