Advertisment

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவு!

Former minister Manikandan's aides also go missing!

துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். தற்போது அவரது உதவியாளர்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

துணை நடிகை அளித்த பாலியல் புகார் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவும்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் மணிகண்டன் எங்கு இருக்கிறார் என்று தேடுவதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisment

குறிப்பாக, மதுரையில் அவர்பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில், தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகியுள்ள நிலையில், மணிகண்டனின் உதவியாளர்களும் தலைமறைவாகியுள்ளனர்.செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஓட்டுநர், உதவியாளர்கள் ஆகியோர் தலைமறைவாகியுள்ளது போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளது.

Investigation manikandan police Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe